close
Choose your channels
iruttu
Capmaari

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு 'விஜய்சேதுபதி' என டைட்டில்!

Monday, November 4, 2019 • தமிழ் Comments

நடிகர்களின் பெயரிலேயே ஒரு திரைப்படத்தின் டைட்டிலும் அமைவது என்பது திரையுலகில் மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வு ஆகும். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ போன்ற ஒருசில படங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்த நடிகர்களின் பெயரே டைட்டிலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ஒரு படத்திற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் தற்போது நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் அதே நவம்பர் 15ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டு சற்றுமுன் டைட்டிலுடன் கூடிய போஸ்டரையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz