close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

Wednesday, September 23, 2020 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தெரிந்ததே.

விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. மேலும் விஜய்யுடன் அவர் நடித்த ‘மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் ஓடிடியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’துக்ளக் தர்பார்’ ’கடைசி விவசாயி’ போன்ற படங்களும் கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் இன்னொரு படமான ’லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

’லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். தற்போது விஜய்சேதுபதி ராஜஸ்தானில் டாப்ஸி நடித்து வரும் படத்தில் நடித்து வருவதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதுவரை அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்த படத்தை இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார். இந்தப் படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் உள்ள இடைத் தரகர்கள் எவ்வாறு விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர் என்பதும், கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz