'எம். குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாரா? ஆச்சரிய தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரவி மோகன் நடித்த "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி" திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 50 லட்சம் என்ற நிலையில், 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் இந்த படம் ரீ-ரிலீஸாகிய நிலையில், நதியா, அசின், ரவி மோகன் உள்ளிட்டோர் தங்களது மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகும், இந்த படம் ரீ-ரிலீஸாகி நல்ல வசூலை செய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ரவி மோகனுக்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக ஓஏகே சுந்தர் என்பவர் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி" திரைப்படத்தில் விஜய் சேதுபதி சில காட்சிகளில் நடித்திருந்தார்" என்று கூறியுள்ளார்.
"ரவி மோகனுக்கு நான் பாக்சிங் செய்வதற்கு ஊக்கம் கொடுப்பேன். அப்போது எனக்கு பின்னாடி ஒருத்தர் நின்று கொண்டிருப்பார். அவர் தான் விஜய் சேதுபதி! இந்த விஷயம் எனக்கே தெரியாது. ஆனால், விஜய் சேதுபதி என்னிடம் சில ஆண்டுகளுக்கு பின் சொன்னார்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி" திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. அப்போதெல்லாம் விஜய் சேதுபதி சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார் என்பதும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"புதுப்பேட்டை", "வெண்ணிலா கபடி குழு" உள்ளிட்ட படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், ""எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி"" படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை பலரும் அறிந்திராத நிலையில் தற்போது பேட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com