close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'அரபிக்குத்து' பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார்? சிவகார்த்திகேயன் தகவல்!

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும், அதுமட்டுமின்றி இந்த பாடலுக்கு கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆனது என்று தெரிந்ததே.

இந்த நிலையில் 'அரபிக்குத்து’ பாடலை அனிருத் கம்போஸ் செய்தார் என்பதும், சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'அரபிக்குத்து’ பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என்பது குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

'அரபிக்குத்து’ பாடலை கேட்டதும் விஜய் அனிருத்தை பாராட்டியதாகவும் மேலும் பாடல் எழுதிய சிவகார்த்திகேயனிடம், ‘நன்றி நண்பா! பாடல் நன்றாக இருக்கிறது, பாடல் செம ஹிட்டாகும்’ என்று கூறியதாகவும் சிவகார்த்திகேயன் விழா மேடை ஒன்றில் கூறியுள்ளார். விஜய் கணித்தது போலவே 'அரபிக்குத்து’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.