இன்று தவெக மாவட்ட செயலாளர்களின் 6ஆம் பட்டியல்.. பனையூர் அலுவலகத்தில் வெளியிடும் விஜய்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுக்கான 6-ஆம் கட்ட பட்டியலை, விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.
பெரம்பலூர், தருமபுரி, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நிர்வாகிகளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
இதில், மாதவரம், திருவிக நகர், திருவொற்றியூர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், உசிலம்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களுக்கு, நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்தம் 120 மாவட்டங்களில், ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக இன்று 19 மாவட்ட நிர்வாகிகளுக்கான அறிவிப்பு விஜய் நேரில் சந்தித்து வெளியிட உள்ளார்.
மேலும் மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல், இன்னும் ஒரு வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியானவுடன் மற்றும் ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவரது சுற்றுப்பயணம் குறித்த தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com