close
Choose your channels

இளையதளபதியையே அசர வைத்த பிரபல நடிகர் மகனின் நடனம்

Thursday, September 29, 2016 • தமிழ் Comments

இளையதளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு அற்புதமான டான்சர் என்பது அனைவருக்கும் அறிந்ததே. விஜய்யின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட அவருடைய நடனத்தை பாராட்டுவதுண்டு. இந்நிலையில் மிகச்சிறந்த டான்சரான விஜய்யையே ஒரு புதுமுக நடிகரின் டான்ஸ் கவர்ந்துள்ளது. அவர் தான் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி.
உமாபதி அறிமுகமாகும் முதல் படமான 'அதாகப்பட்டது மகா ஜனங்களே' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு உமாபதி அபாரமாக நடனம் ஆடியுள்ளாராம். தினேஷ் மாஸ்டர் வித்தியாசமான ஸ்டெப்களுடன் நடனப்பயிற்சி கொடுத்த இந்த பாடலின் வீடியோவை தம்பி ராமையா, விஜய்க்கு சமீபத்தில் போட்டு காட்டியதாகவும், அந்த பாடலில் உமாபதியின் நடனத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட விஜய், மீண்டும் ஒருமுறை பாடலை பார்த்து உமாபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் விஜய் மட்டுமின்றி உமாபதியின் நடனத்தை ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட ஒருசில முன்னணி ஹீரோக்களும் பாராட்டியுள்ளனர். உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இன்பசேகர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz