close
Choose your channels
Viruman
Laal

விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: நிர்வாகிகள் உற்சாகம்!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையில் சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் அந்த கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க முடியாது என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனால் ஆட்டோ சின்னம் கேட்டு இருந்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதிர்ஷ்டவசமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கேட்ட ஆட்டோ சின்னமே பெரும்பாலான விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில வேட்பாளர்களுக்கு மட்டுமே உலக உருண்டை, குடை போன்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும், இதனால் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதே உற்சாகத்துடன் ஆட்டோ தினத்தை மையமாக வைத்து தீவிர பிரச்சாரம் செய்தால் ஊரக உள்ளாட்சி தேர்தல் போலவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் பல வேட்பாளர்கள் வெற்றி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.