close
Choose your channels
Por
Joshwa

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். கூறியது யார் தெரியுமா?

Tuesday, June 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்தநாள் நாளை வெகுசிறப்பாக அவரது ரசிகர்கள் கொண்டாடவுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் இன்றே அவருக்கு தங்களது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சற்று முன்னர் இயக்குனர் லிங்குசாமி வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்றும் அவர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஒருசிலரும், ரஜினியை அடுத்து அதிக வசூல் தரும் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் ஒருசிலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தனது வாழ்த்தில் அடித்து கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான விஜய்யின் 'தெறி' படத்தில் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.