close
Choose your channels
LoveToday
CWK

விஜய்யின் 'தளபதி 67': அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், சமந்தா, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரித்விராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரும் இணைந்த செல்பி புகைப்படம் ரத்னகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதில் 1 முதல் 10 வரையிலான எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6,7 என்ற எண்களுக்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முதல் தொடங்கும் அல்லது ’தளபதி 67’ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு தீபாவளி என்பதை மறைமுகமாக ரத்னகுமார் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.