120 மாவட்டங்களாக பிரிப்பு.. நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம்.. தவெக தொண்டர்கள் குஷி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாக கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் நோக்கில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, விஜய் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் பரிசளிக்கப்பட்ட நிலையில் அந்த நாணயத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாவட்ட நிர்வாகிகள் செயல்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com