close
Choose your channels
RaRa

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: குவியும் பாராட்டு

Saturday, February 29, 2020 • தமிழ் Comments

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று பஹ்ரைன். அங்குள்ள மக்களில் சிலர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் பஹ்ரைனில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொது மக்களை காப்பாற்ற உதவிகளை செய்து வருகின்றனர்

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாத வகையில் தடுப்பதற்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் பக்ரைனில் உள்ள பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கி வருகின்றனர். நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முக கவசங்களை விஜய் ரசிகர்கள் கொடுத்தது மட்டுமின்றி கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த போஸ்டர் மற்றும் பேனர்களையும் அவர்கள் வைத்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள பல இடங்களில் விஜய் ரசிகர்கள் இயற்கை பேரிடர் நடந்த காலம் உள்பட பல சமூக தொண்டுகளை செய்து வரும் நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள விஜய் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செயல்களை செய்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz