close
Choose your channels

சாந்தனுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாரா விஜய் மகள்?

Monday, August 24, 2020 • தமிழ் Comments

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். முதல் முதலாக நடிகர் சாந்தனுவுக்கு பிறந்தநாள் காமன் டிபி போஸ்டர்களை அவரது ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாந்தனுவுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சாந்தனு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு என்பதும் முதல்முறையாக விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் சாந்தனு நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா சாந்தனுவுக்கு ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால் அந்த ட்விட்டர் அக்கவுண்ட் போலியானது என்றும் விஜய் மகள் திவ்யா பெயரில் எந்தவிதமான ட்விட்டர் அக்கவுண்ட்டும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த போலி அக்கவுண்டில் தெரிவிக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கு நடிகர் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz