close
Choose your channels
iruttu
Capmaari

விஜய்யின் பிகில் படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய்யின் சூப்பர்ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது

இந்த படத்திற்கு ஏற்கனவே பல பெருமைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பெருமையாக இந்த படம் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கூடுதலாக பெற்றுள்ளது. தளபதி விஜய்யின் படங்கள் தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்தி வருவது தமிழ் சினிமாவுக்கே பெருமையானதாக கருதப்படுகிறது.

ஒருகாலத்தில் தமிழ்ப்படம் தமிழகத்தையே தாண்டாது. அதன்பின்னர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளி மாநிலங்கள், அண்டை நாடுகள் என பரவி தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் வியாபாரத்தை விரிவாக்கியுள்ளது என்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நிரூபிக்கின்றது
 

 

Get Breaking News Alerts From IndiaGlitz