close
Choose your channels
Rocketry
Yaanai

விஜய் ஆண்டனி - அருண் விஜய் படத்தின் லேட்டஸ் அப்டேட்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Wednesday, May 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த ’அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சராஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அக்னி சிறகுகள்’. நடராஜன் சங்கரன் என்பவர் இசை அமைப்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் மே 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.