விஜய் ஆண்டனியின் 14வது பட டைட்டில் அறிவிப்பு!
பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, ’நான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’பிச்சைக்காரன்’ உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு இவர் நடித்த ’கொலைகாரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ’தமிழரசன்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் ’அக்னி சிறகுகள்’ ’காக்கி’ மற்றும் ’பிச்சைக்காரன் 2’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆண்டனியின் 14வது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கி வருகிறார் என்பதும் இன்ஃபினிட்டி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’கோடியில் ஒருவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ஆண்டனியின் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஆத்மிகா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும், நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.