close
Choose your channels
PatamPoochi
mayoon

மீண்டும் மோதுகிறதா விஜய்-சிம்பு படங்கள்?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் மீண்டும் விஜய் மற்றும் சிம்பு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும் இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே ‘பீஸ்ட்’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு படங்களின் ரிலீஸ் தேதியும் ஏப்ரல் 14 அன்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் விஜய் மற்றும் சிம்பு படங்கள் மோத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.