close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

விஜய் - ஷாம் ஸ்டண்ட் காட்சிகள்: இணையத்தில் லீக்கான 'வாரிசு' வீடியோ!

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் விஜய் மற்றும் ஷாம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருவதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துறைமுக ஊழியர்களுடன் விஜய் மற்றும் ஷாம் இருவரும் சேர்ந்து சண்டை போடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இதனை அடுத்து விஜய் மற்றும் ஷாம் ஆகிய இருவரும் சகோதரர்களாக நடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய் நடித்த ’குஷி’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் ஷாம் நடித்து இருந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. தமன் இசையில் உருவான இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.