close
Choose your channels
Viruman
Laal

விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் புகைப்படங்கள் வைரல்!

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இரு தரப்பிலும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் இந்த சந்திப்பை மையமாக வைத்து பல அரசியல் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும், புதுவை மாநிலத்தில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி இருவரும் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே பேசும் புகைப்படம், புதுவை முதல்வருடன் விஜய் நின்று கொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் உடன் புதுவை முதல்வர் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படம் ஆகியவை வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.