close
Choose your channels
NMM

அடுத்தடுத்து இரண்டு முறை விஜய்யுடன் இணையும் பிரபுதேவா: ரசிகர்களுக்கு செம விருந்து!

Thursday, June 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து இரண்டு முறை பிரபுதேவா இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதை உறுதி செய்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் அதிக பாடல்கள் இருப்பதாகவும் அதில் இரண்டு பாடல்களுக்கு அடுத்தடுத்து பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவா நடன இயக்கத்தில் விஜய் டான்ஸ் ஆடினால் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் இப்போதே அந்த பாடல்களை திரையில் பார்க்க பெறும் ஆர்வத்தில் உள்ளனர்.

ஏற்கனவே விஜய் நடித்த ’போக்கிரி’ ’வில்லு’ ஆகிய படங்களை பிரபுதேவா இயக்கிய நிலையில் எதிர்காலத்தில் விஜய் படத்தை பிரபுதேவா இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.