close
Choose your channels

'வலிமை' அம்மா பாடலுக்கு பொருத்தமான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Monday, December 6, 2021 • தமிழ் Comments

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ திரைப்படத்தின் அம்மா பாடல் நேற்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ரஜா கம்போஸ் செய்த இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார் என்பதும், சித்ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பாடலுக்கு மிக பொருத்தமான புகைப்படமாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது.

தனது அம்மா ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி அவர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்வதாக குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், அம்மாவின் ஆசி தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை எழுத வாய்ப்பு கொடுத்த யுவன் சங்கர் ராஜாவுக்கும், எச் வினோத் அவர்களுக்கும் நன்றி கூறிய விக்னேஷ் சிவன், ஒன் அண்ட் ஒன்லி அஜித் சார் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz