close
Choose your channels
siren
lal_salaam

தனுஷ் படத்தில் விருப்பமில்லாமல் பணிபுரிந்தேன்: விக்னேஷ் சிவன்

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த படத்தில் விருப்பமில்லாமல் பணிபுரிந்தேன் என இயக்குனர் விக்னேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’வேலையில்லா பட்டதாரி’. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூ.53 கோடி வசூலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த படத்தில் விக்னேஷ் என்ற கேரக்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியபோது, ‘எனக்கு நடிப்பதில் பெரிதாக ஆர்வமில்லை. விருப்பம் இல்லாமல் தான் ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்றைக்கு வரவில்லை. எனவே தனுஷ் என்னை அந்த ரோலில் நடிக்க வைத்தார்’ என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது ஓடிடிய்லும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் ‘அஜித் 62’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் விக்னேஷ் சிவன் தீவிரமாக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.