close
Choose your channels

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

Saturday, November 27, 2021 • தமிழ் Comments

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் இளம் நடிகர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்தான் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்று கூறப்படுகிறது.

’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மஹான்’ என்ற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் கபடி விளையாட்டை சார்ந்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி துருவ்விக்ரமின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் ஒரு இளம் வாலிபரின் துடிப்பான ரொமான்டிக் படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz