close
Choose your channels
aranmanai

கைகோர்த்த குடும்ப உறுப்பினர்கள்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்..!

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் கைகோர்த்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர் என்பதும் தெரிந்ததே. அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது நான்கு பேர்களும் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் ’நம்முடைய விருப்பமானவர்களிடம் தான் நம்முடைய சந்தோஷம் அடங்கி உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருந்த 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் சமீபத்தில் வெளியேறினார். இந்த நிலையில் தற்போது அவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment