விக்னேஷ் சிவனின் 'எல்.ஐ.சி.' படத்தின் புதிய டைட்டில் இதுதான்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.சி.’ என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் தற்போது டைட்டில் மாற்றப்பட்டு புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் ‘எல்.ஐ.சி.’ என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அனிருத் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘எல்.ஐ.சி.’ என்ற டைட்டில் வைத்ததால் எல்ஐசி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது எல்ஐசிக்கு பதிலாக ’எல்.ஐ.கே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்பதற்கு பதிலாக ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற டைட்டிலுடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இன்று பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#LIK Firstlook
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 25, 2024
Hope you like Lik @VigneshShivN @anirudhofficial @iam_SJSuryah @7screenstudio pic.twitter.com/6CY5hCKYNv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments