close
Choose your channels
Viruman
Laal

'நினைச்சா தோணும் இடமே': விக்கி-நயன் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நினைச்சா தோணும் இடமே' என்ற கேப்ஷனுடன் நயன்தாராவுடன் உள்ள ரொமான்ஸ் படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 9ஆம் தேதி சென்னை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் திருமணத்திற்கு பின்னர் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்ற நட்சத்திர தம்பதிகள் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அதேபோல் ’அஜித் 62’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் விக்னேஷ் சிவன் உள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடனான ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து ’நினைச்சா தோணும் இடமே என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை’ என்ற பாடலில் உள்ள வரியை மேற்கோள் காட்டி அவர் பதிவு செய்துள்ள இந்த ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.