close
Choose your channels
sisa

திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

Monday, September 27, 2021 • தமிழ் Comments

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் அதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் என்பதும் இருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஷாருக்கானின் ‘லயன்’, அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்ட்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz