close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன் - விக்னேஷ் சிவன் !

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் நாயகி மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் பாலிவுட் பிரபலம் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பதிவுகள் வைரலாகி வருகிறது.

பாலிவுட் பிரபலம் விக்கி கெளஷல் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு தனது சமூக வலைத்தளத்தில் நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் விக்கியை கட்டி பிடித்தவாறே எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன் மற்றும் விக்கி கெளஷல் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பதும் இவர்கள் குறித்து சில வதந்திகள் பரவி வந்த போதிலும் அவர்கள் அந்த வதந்தியை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பை தொடர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் விக்கி கெளஷலுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவு செய்து தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாளவிகா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் பதிவுகளுக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.