எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.. 'விடாமுயற்சி' படத்தின் 163 வினாடிகள் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் 6ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்தது. இந்த நிலையில், சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா 163 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளதை அடுத்து, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித், த்ரிஷா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சற்று முன் 2 நிமிடம் 43 வினாடிகள் (163 வினாடிகள்) கொண்ட மேக்கிங் வீடியோ வெளியானது.
இந்த வீடியோவில் "எல்லோரும் கைவிடும் போது உன்னை நம்பு" என்ற டைட்டிலுடன், இந்த படத்தை எடுக்கும் போது படக்குழுவினர் சந்தித்த சவால்கள் குறித்த காட்சிகள் உள்ளன. படப்பிடிப்பு பொருட்களுடன் மலை ஏறுவது, கடுமையான புயல் பாதிக்கப்படுவது, அதை விட கடினமான பனியில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தியது, அஜித்துக்கு ஏற்பட்ட கார் விபத்து போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இதன் மூலம் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில், ஆக்சன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The toughest challenges forge the greatest triumphs! 🔥 Step behind the scenes of VIDAAMUYARCHI 💪 Pushing limits in the harshest terrains. ⛰️
— Lyca Productions (@LycaProductions) February 3, 2025
🔗 https://t.co/WPFLwCykLR
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar… pic.twitter.com/haDfk8fono
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com