close
Choose your channels
Por
Joshwa

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும்: இயக்குனர் வெற்றிமாறன்

Sunday, November 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும்: இயக்குனர் வெற்றிமாறன்

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரது செயல்பாடுகள் மற்றும் அவர் விஜய் மக்கள் மன்றத்தை நடத்திச் செல்லும் முறை ஆகியவை அவர் அரசியலுக்கு விரைவில் வர இருப்பதை குறிக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் ’விஜய் அரசியலுக்கு வருவதற்கான வேலைகளை தான் செய்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வருவதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், அதன்பிறகு அரசியலுக்கு வரவேண்டும், விஜய் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்த பிறகு அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் ’சமூகத்தில் சினிமா நல்ல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் ’ஜெய்பீம்’ போன்ற படத்தால் பழங்குடி மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.