close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'ஆர்.ஆர்.ஆர்' நாயகனுடன் இணையும் வெற்றிமாறன்: வாடிவாசலுக்கு அடுத்து இந்த படம் தான்!

Sunday, June 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்த பிரபல நடிகருடன் வெற்றிமாறன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள் என்பதும் இந்த படத்திற்கு பின்னர் இருவரும் பிசியாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறர், ‘ஆர்.ஆர்.ஆர்’ பட நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆரை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும் அந்த கதையை கேட்டு ஆச்சரியமடைந்த ஜூனியர் என்டிஆர் இந்த படத்தின் கதையை டெவலப் செய்யுங்கள், நாம் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் உருவாக்குவோம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய்சேதுபதி நடித்து வரும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர், சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு இயக்குனர் வெற்றிமாறான், ஜூனியர் என்டிஆர் உடன் இணைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.