close
Choose your channels
NMM
NMM

வெற்றிமாறன் பிறந்த நாளில் 'வாடிவாசல்' படக்குழுவினர் என்ன செய்தார்கள் தெரியுமா? வைரல் வீடியோ

Sunday, September 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் சூர்யாவின் ’வாடிவாசல்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெற்றிமாறன் பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் ’விடுதலை’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ படக்குழுவினர் வாடிவாசல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கேக் தயார் செய்த நிலையில் அந்த கேக்கை படக்குழுவினர் முன் வெற்றிமாறன் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்தை முடித்தவுடன் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்க உள்ளார் என்பதும் ஏற்கனவே இந்த படத்திற்கான டெஸ்ட் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.