மீண்டும் நடிக்க வரும் குண்டு கல்யாணம்: பிரபலத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான குண்டுகல்யாணம் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 1980ஆம் ஆண்டில் ’மழலைப் பட்டாளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் காமெடி நடிகர் குண்டுகல்யாணம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு, போக்கிரி ராஜா, தங்கமகன், படிக்காதவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற படத்திற்கு பின்னர் கடந்த 11 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த குண்டு கல்யாணம், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’நாம்இருவர் நமக்குஇருவர்’ என்ற சீரியலில் மாறன் என்ற கேரக்டரில் குண்டு கல்யாணம் நடிக்க உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
இந்த சீரியலின் நாயகனான மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டுகல்யாணம் உடன் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ’மாறன்’ என்ற கேரக்டரில் நடிக்கவுள்ள குண்டுகல்யாணம் சாருடன் இணைந்து நடிப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.