close
Choose your channels

பிரபல நடிகையை அடித்தே கொன்ற சொந்த மகன்: பிணத்தை ஆற்றில் வீசியதாக தகவல்!

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையை அவரது சொந்த மகன் அடித்தே கொலை செய்து பிணத்தை ஆற்றில் தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகை வீணா கபூர். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பு அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

பழம்பெரும் நடிகையான இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில் அவர் மும்பையில் தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை வீணா கபூருக்கும் அவரது மூத்த மகன் சச்சின் கபூருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இவரது இரண்டாவது மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் அவர் அங்கிருந்து போன் செய்த போது யாரும் எடுக்காததால் அமெரிக்காவிலிருந்து அவர் மும்பை காவல் நிலையத்தில் தனது தாயை காணவில்லை என புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீணாகபூர் வீட்டுக்குச் சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீணா கபூரின் மூத்த மகன் சச்சின் கபூர் மற்றும் வீட்டு வேலையாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சொத்து தகராறில் தனது தாயை அவரது சொந்த மகனான சச்சின் கபூர் கொலை செய்ததாகவும், தாயின் உடலை  90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து சச்சின் கபூர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வீணா கபூரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.