close
Choose your channels
siren
lal_salaam

கவர்ச்சி நடிகை அனுராதாவை ஞாபகம் இருக்கிறதா? மகளுடன் இருக்கும் மாஸ் புகைப்படங்கள்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 80கள் மற்றும் 90களில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடிய நடிகை அனுராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இணையாக தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடனம் ஆடியவர் அனுராதா என்பது 80s, 90s கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்கும். இவர் கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் ஏராளமான பாடல்களுக்கு நடனம் ஆடினார் என்பதும் ஒரு சில கேரக்டர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு சதீஷ்குமார் என்ற நடன இயக்குனரை அனுராதா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அபிநயாஸ்ரீ என்ற மகளும், காளிச்சரண் என்ற மகனும் உள்ளனர்

அனுராதாவின் மகள் அபிநயாஸ்ரீ விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை அனுராதா தனது சமூக வலைதளத்தில் தனது மகளுடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.