close
Choose your channels
IKK
Jail

நயன்தாராவுக்கு உதவும் வெங்கட்பிரபு: நாளை செம விருந்து!

Thursday, October 14, 2021 • தமிழ் Comments

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக கருதப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ஷாருக்கான் - அட்லியின் ‘லயன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நயன்தாரா நடிப்பில் உருவான ’நிழல்’ திரைப்படம் வெளியானது என்பது மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழ் டைட்டிலாக ’மாய நிழல்’ என்ற வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு நாளை ரிலீஸ் செய்து படத்தின் புரமோஷனுக்கு உதவி செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஞ்சாக்கோ போபன், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அப்பு என். பட்டாதிரி என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்பட மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz