close
Choose your channels

'சென்னை 28' கிளைமாக்ஸ்க்கு ஐடியா கொடுத்த பிரபல நடிகர்: வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்

Wednesday, July 8, 2020 • தமிழ் Comments

இயக்குனர் வெங்கட்பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படமான சென்னை-28 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பிரபல நடிகர் ஒருவர் தான் ஐடியா கொடுத்ததாகக் கூறியுள்ளார்

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ’மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு சிம்புவை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றும், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் தனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் தன்னுடைய முதல் படமான சென்னை-28 படத்தை பார்த்த சிம்பு, ‘சரோஜா சமாநிக்களோ’ என்ற பாடலை கிளைமாக்ஸுக்கு முன் வைக்க சிம்புதான் ஐடியா கொடுத்ததாகவும், அந்த ஐடியா சரியாக ஒர்க் அவுட் ஆனது என்றும் தெரிவித்தார். மேலும் சென்னை-28 படத்தை விற்பனை செய்யவும் சிம்பு தனக்கு உதவி செய்ததாகவும் அவர் கூறினார்

மேலும் சிம்புவுடன் பணிபுரிய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அது தற்போது நிறைவேறியுள்ளது என்றும் வெங்கட்பிரபு கூறியுள்ளார். பொதுவாக சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்றும், ஆனால் நான் சிம்புவை ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையில் படப்பிடிப்பு நடத்தி உள்ளேன் என்றும், சிம்பு மீதான குற்றச்சாட்டு எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார். வெங்கட்பிரபுவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz