close
Choose your channels
Don
Nenjukku Needhi

'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான ஸ்டில் வெளியிட்ட சிம்பு!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படமான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக சிம்பு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து, அட்டகாசமான ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டுள்ளார், அந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பிறகு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.