close
Choose your channels
NMM
NMM

என் உடை, என் இஷ்டம், நீங்கள் யார்  அதை கேட்க? 'வெந்து தணிந்தது காடு' பாடகி ஆவேசம்!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் என்னுடைய வசதிக்காக எனக்கு பிடித்த உடைகளை அணிந்து கொள்கிறேன் என்றும் எனக்கு இப்படிப்பட்ட உடைகள் தான் பொருந்தாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்றும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ’மல்லிப்பூ’ என்ற பாடலை பாடிய பாடகி ஆவேசமாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் இடம்பெற்ற ’மல்லிப்பூ’ சூப்பர் ஹிட் பாடலை பாடிய பாடகி பூஜா வைத்தியநாத், ஏற்கனவே மெர்சல் படத்தில் இடம்பெற்ற ’ஆளப்போறான் தமிழன்’ ’புலி’ படத்தில் இடம்பெற்ற ’ஜிங்கிலியா’ ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற ’பார்க்காத பார்க்காத’ போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூஜா வைத்தியநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது மாடர்ன் டிரெஸ் அணிந்து பாட்டு பாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் அவருடைய ஆடைக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்த உடை உங்களுக்கு செட் ஆகவில்லை என்பது போன்ற கமெண்ட்ஸ்களுக்கு அவர் காட்டமாக பதில் சொல்லியுள்ளார்.

என்னுடைய வசதிக்கும் விருப்பத்திற்கும் தான் நான் ஆடை அணிவித்து கொள்கிறேன், உங்களை மகிழ்விப்பதற்காக அல்ல என்று கூறியுள்ள பூஜா வைத்தியநாத், ‘இப்படி உடை அணிவது தவறு, இந்த உடைகள் எனக்கு பொருந்தாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும், என் உடல்,என் வாழ்க்கை என்னுடைய மகிழ்ச்சிக்காக நான் ஆடை அணிகின்றேன் என்றும் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் என்னை பின் தொடர வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.