close
Choose your channels

தளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை

Thursday, December 5, 2019 • தமிழ் Comments

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான விஜய்யின் ’பிகில்’ படத்தின் ஆடியோ விழாவின்போது ’நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யுங்கள், மோசமான விஷயங்களை தவிர்த்துவிடுங்கள்’ என்று விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவரது ரசிகர்கள் தற்போது சமூகத்திற்கு தேவையான ஒரு சில விஷயங்களை ட்ரண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பிகில்’படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்த வர்ஷா பொம்மலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு செய்தியை குறிப்பிட்டு தளபதி விஜய் சொன்னது போல் இதனையும் டிரெண்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்

பாலியல் வன்முறையாளர்களிடம் இருந்து உங்கள் சகோதரி மற்றும் தோழிகளை காப்பாற்ற நீங்கள் அவர்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே பரிசாகக் கொடுங்கள் என்றும் பெப்பர் ஸ்ப்ரே தற்போது ஆன்லைனில் குறைந்த விலையில் கிடைப்பதால் அதனை அவர்களுக்கு பரிசாக கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்

தளபதி அண்ணா நல்ல விஷயங்களை டிரெண்ட் செய்ய சொன்னது போல் இந்த விஷயத்தையும் டிரென்ட் செய்யுங்கள் என்று வருஷம் வர்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்ல மெட்ரோ ரயில்வே நிர்வாகங்கள் அனுமதித்த நிலையில் ஆண்கள் அவர்களது தோழிகள் மற்றும் சகோதரிகளுக்கு இந்தப் பெப்பர் ஸ்ப்ரேயை பரிசாக கொடுக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது இதன் மூலம் பாலியல் வக்கிர புத்தி உள்ளவர்களிடமிருந்து பெண்கள் காப்பாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz