close
Choose your channels

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கிங்… பிபின் ராவத்தின் வியக்க வைக்கும் சாதனைகள்!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்திய ராணுவத்தில் புயலாக பரிணமித்தவர்தான் பிபின் ராவத். குண்டு மழை, தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல் என பல்வேறு சூழல்களில் இந்திய நாட்டிற்காக தனது உழைப்பை செலுத்தியவர். சிறிய வயதில் அப்பா, தாத்தா என இராணுவ உணர்வோடு வளர்ந்த இவர் இளமை காலம் முதல் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இந்திய ராணுவத்திற்காகவே செலவிட்டு வந்துள்ளார்.

தற்போது ஹேலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் வெளிநாட்டு இராணுவப் படைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இந்திய இராணுவத்தை வழிநடத்தியவர் பிபின் ராவத் எனப் பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இவருடைய இறப்பிற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்த பிபின் ராவத், கட்க்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் 1978 இல் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையித்தில் 11 ஆவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் 5 ஆவது படை அணியில் இணைந்து பணியாற்றத் துவங்கினார்.

கடந்த 2015 ஜுன் மாதத்தில் மணிப்பூர் மாநில பகுதிகளில் நாகலாந்து தீவிரவாத அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு 18 இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்தபோது அவர்களை ஒடுக்கியவர் பிபின் ராவத். அப்போதே லெப்டினென் ஜெனரலாக இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் தப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

1987 இல் அருணாச்சலப் பிரதேச எல்லையில் சும்தோராங் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது சிறிய படையை வைத்துக்கொண்டு எதிர்த்து வெற்றிப்பெற்றவர்.

2015 இல் மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல்களை வழிநடத்தியவர் பிபின் ராவத்.

கடந்த 2016 இல் காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் ஜெய்ஷ்இமுகமது அமைப்பனிர் தீவிரவாத தாக்குதல் ஈடுபட்டு 19 இராணுவ வீரர்களை கொன்றுகுவித்தபோது அவர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று எதிர்தாக்குதல் நடத்தியவர் பிபின் ராவத்.

கடந்த 2017 இல் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட இவர் சியாச்சி எல்லையில் நடைபெற்ற கலவரத்தை ஒடுக்கினார்.

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தீவிரவாத நடமாட்டங்களை முற்றிலும் அறிந்து வைத்திருந்தவர்.

ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்கெடுத்து காங்கோ நாட்டில் அமைதிக்கு நிலைநாட்டியவர். மேலும் ஐ.நாவின் கூட்டமைப்பில் நடைபெற்ற அந்த மிஷனுக்கு தலைமைப் பொறுப்பு வகித்து காங்கோவின் வன்முறையாளர்களின் செயல்பாட்டை முடக்கினார்.

சமீபத்தில் சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது பல்வேறு முன்னேற்பாடுகளுடன் இந்திய இராணுவத்தை வழிநடத்தியவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்திய ராணுவத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த பிபின் ராவத்தின் உழைப்பிற்கு இந்தியர்கள் அனைவரும் நன்றி கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.