close
Choose your channels
aranmanai

கல்யாணம் செய்தால் யாருக்கு நன்மை? என்ன இப்படி சொல்லிட்டாங்க வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கல்யாணம் செய்தால் யாருக்கு நன்மை என்று ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகில் பிஸியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார் என்பதும் தற்போது அவர் தனுஷின் ’ராயன்’ உள்பட உசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் 2ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இந்த நிச்சயதார்த்த விழாவில் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் திருமண தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாணம் செய்தால் யாருக்கு நன்மை என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கல்யாணம் செய்தால் புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர், சமையல்காரர், மண்டபம் வைத்திருப்பவர், மேக்கப் போடுபவர், சேலை கட்டி விடுபவர் ஆகியோர்களுக்கு தான் நன்மை என்றும் அதனால் அனைவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் காமெடியாக பதிவு செய்துள்ளார். இந்த காமெடி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவில் வரலட்சுமி ஸ்டைலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ’நீங்கள் சமந்தா போலவே இருக்கிறீர்கள்’ என்று கமெண்ட்களை பதிவு செய்து வருவது வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment