close
Choose your channels
warrior
iravin_nizhal

வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? 21வது பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21வது பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் .

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி மகன் தந்தை வீட்டிலும், மகள் வனிதா வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தற்போது 21 வயதை பூர்த்தி செய்ததை அடுத்து அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை வனிதா நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் .

அவர் தனது வாழ்த்தில், ‘என்னுடைய முதல் காதல் நீ தான். எப்போதும் உன் மேல் எனக்கு அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஒரு தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பு தான் புனிதமானது. ஒரு அம்மாவாக உனது 21வது பிறந்த நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் மகன் ஸ்ரீஹரி நீ 21 வயதை கடந்து உள்ளாய்.உனக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ நினைப்பது அனைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்வாதம் செய்யட்டும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.