close
Choose your channels
IKK
Jail

வேலையில்லாத இடியட்: பிரபல நடிகரை விமர்சனம் செய்த வனிதா!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments

பிரபல நடிகர் ஒருவரை வேலை இல்லாத இடியட் என நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவுக்கும் நடுவர்களில் ஒருவரான ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலானது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான நடிகர் நகுல் இது குறித்து கருத்து கூறிய போது ’வனிதா மீதுதான் தவறு என்றும் ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா ’நான் என் வாழ்க்கையில் மிகவும் பிசியாக இருக்கிறேன். வேலை இல்லாத இடியட்களை கண்டுகொள்ள எனக்கு நேரமில்லை. செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன் பின் மீண்டும் படப்பிடிப்பு செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அந்த தொடரில் இருந்து நான் விலகினேன். எனக்கு ஒருவருடன் பிரச்சனை இருக்கிறது என்றால் எங்களுக்குள் ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதனால் நாங்கள் இருவரும் வாயை மூடிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் அதைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது’ என்று தெரிவித்திருக்கிறார். வனிதாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz