close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

வனிதா விஜயகுமாரின் 'இரவு பார்ட்டி': காமெடி நடிகருடன் செம ஆட்டம்!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா விஜயகுமார் நேற்று நடத்திய இரவு பார்ட்டியில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஜவுளிக்கடை ஆரம்பித்த நிலையில் அந்த ஜவுளிக்கடை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துவருகிறார். அதுமட்டுமின்றி யூடியூப் சேனலிலும் அவர் பிசியாக உள்ளார் என்பதும் சமையல் குறிப்புகளை அதில் அவர் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பிரசாந்தின் ‘அந்தகன்’ உள்பட ஐந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு வனிதா விஜயகுமார் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

காமெடி நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரை நடிகர் பிரஜன் உள்ளிட்டோர் இந்த இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் வனிதா விஜயகுமார் செம டான்ஸ் ஆடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.