வனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் வனிதா. யாரையும் பேச விடாமல் அவர் மட்டுமே பேசுவார் என்றும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பார் என்றும், குறிப்பாக கவின்-லாஸ்லியா காதல், தர்ஷன்-ஷெரின் காதல், முகின் - அபிராமி காதல் விஷயத்தில் பட்பட் என்று மனதில் தோன்றியதை அவர் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இதனால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் எழுந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டாலும், வனிதா சொன்னது உண்மை என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவருக்கும் தெரியவந்தது
இந்த நிலையில் தற்போது வனிதா தனது சமூக வலைப்பக்கத்தில் சில அரிய புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் பிறந்த நாளின்போது தனது தாயாரும் நடிகையுமான மஞ்சுளா மடியில் இருப்பது போன்று புகைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கையில் தூக்கி வைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்
வனிதாவின் மலரும் நினைவுகளான இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது