close
Choose your channels
IKK
Jail

இன்று வெளியான 'வலிமை' போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments

‘வலிமை’ திரைப்படத்தின் வில்லன் நடிகர் கார்த்திக்கேயாவின் பிறந்தநாளை அடுத்து இன்று புதிய போஸ்டர் ஒன்று வெளியானது என்பதும், இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த போஸ்டரில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருப்பதை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். அந்த அறிவிப்பு ‘வலிமை’ திரைப்படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டரில் டிஜிட்டல் பார்ட்னராக ஜீ தமிழ் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகள் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் ஜீதமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழ் தவிர மற்ற மொழிகளில் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதை இனிமேல்தான் நான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

‘வலிமை’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை அடுத்த ஓரிரு மாதங்களில் ஜீதமிழில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz