close
Choose your channels
Viruman
Laal

'ராக்கெட்டரி' படத்திலும் போலீசாக நடித்த 'வலிமை' நடிகர்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் போலீசாக நடித்த நடிகர் ஒருவர், மாதவன் நடித்த ’ராக்கெட்டரி’ திரைப்படத்திலும் போலீஸாக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர், அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இவர் தற்போது மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ திரைப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தனது வெப்தொடரில் சிறப்பாக தினேஷ் நடித்ததை பார்த்த பிஜாய் நம்பியார் தான் ’ராக்கெட்டரி’ படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு ஆலோசனை கொடுத்ததாகவும் அவர் கூறியபடி ’ராக்கெட்டரி’ ஆடிஷனில் கலந்து கொண்ட தினேஷ் பிரபாகருக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’வலிமை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த தினேஷுக்கு ’ராக்கெட்டரி’ திரைப்படம் நல்ல திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட பல மொழிகளில் ரிலீசாக உள்ள ’ராக்கெட்டரி’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.