close
Choose your channels
anabel
friendship

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார்: வைரமுத்து டுவிட்!

Sunday, June 27, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை செய்தபின் சென்னை திரும்புவார் என்றும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக் என்ற மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லாத நிலையில் சற்று முன்னர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் தன்னிடம் அமெரிக்காவிலிருந்து ரஜினிகாந்த் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அமெரிக்காவிலிருந்து
ரஜினி அழைத்தார்.

மருத்துவச் சோதனை
நல்ல வண்ணம்
நடந்தது என்றார்;
மகிழ்ந்தேன்.

அவர் குரலில்
ஆரோக்கியம் - நம்பிக்கை
இரண்டும் இழையோடக் கண்டேன்.

அவரன்பர்களின்
மகிழ்ச்சிக்காகவே
இதைப்
பதிவிட்டுப் பகிர்கிறேன்.

Get Breaking News Alerts From IndiaGlitz