close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவ்வபோது இணையும் பிரபலங்கள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். சமீபத்தில் இந்த படத்தில் இணைந்த பிரபலம் சத்யராஜ். இவர் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஏழு முறை தேசிய விருது பெற்ற வைரமுத்து இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' முதல் 'செக்க சிவந்த வானம்' வரை வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளது.

இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.