close
Choose your channels
Por
Joshwa

இனிமே எல்லாமே எனக்கு நல்ல நேரம் தான்: வைபவ் நடித்த 'ஆலம்பனா' டிரைலர்..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைபவ் நடித்த ‘ஆலம்பனா’ என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைபவ் பிறந்த உடனே அவருடைய அப்பாவின் சொத்துக்கள் எல்லாம் பறிபோய் விடுகிறது. அந்த அளவுக்கு ராசியில்லாத மகனாக இருந்த அவர் வளர்ந்து பெரியவனானவுடன் திடீரென அலாவுதீனின் அற்புத விளக்கின் பூதம் தோன்றி அவர் கேட்டதை எல்லாம் அள்ளித் தருகிறது.

அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனையை சந்திக்கும் விதத்தை நகைச்சுவையுடன் கூறி இருக்கும் படம் தான் ‘ஆலம்பனா’. பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பார்வதி, முனீஸ்காந்த், யோகி பாபு, ஆனந்தராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில், வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு புரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.